முதலில் நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளுங்கள்… இன்னாள் பிரதமருக்கு முன்னால் பிரதமர் அறிவுரை…

இந்தியாவில் நடைமுறையில் இருந்த திட்ட கமிஷன் முடிவுக்கு வந்து தற்போது நிதி ஆயோக் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவரான மன்டேக் சிங் அலுவாலியா தற்போது எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழானது தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது.  இந்த நூலை, காங்கிரஸ் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர்,  கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது நடந்த நல்ல விஷயங்களை குறிப்பிட்டார்,  மேலும் அவர், ‘ நாட்டில் பொருளாதார மந்தநிலை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான், அதில் இருந்த மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்,” என, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்றவை குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. ஆனால், தற்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது பலவீனத்தை, தவறை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இவர்கள் பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். அது மிகவும் தவறு. ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால்தான், அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

author avatar
Kaliraj