எனக்கு பணம் முக்கியம் இல்லை! நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி

By leena | Published: Oct 21, 2019 02:38 PM

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள படங்களுக்கு இவருக்கு நல்ல வசூல் வந்துள்ளது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் அதிகரித்துள்ளது. இது வரவேற்க்கத்தக்க மாற்றம் தான் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் போட்டி என்று ஒன்றும் இல்லை. நான் 2 ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன். சகா கதாநாயகிகளோடு என்னை ஒப்பிட்டால் நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகே பணத்தை பற்றி யோசிப்பேன் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc