பிரதமரின் திருப்பதி வருகை உறுதியானது..!இந்நாளில் தரிசனம்

பிரதமர் மோடி திருப்பதி கோவிலுக்கு வருகை தர உள்ளதை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவு மாற்றும் இலங்கை செல்கிறார் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டது.
நேற்று மாலத்தீவு சென்றார்.அதனை அடுத்து இலங்கை செல்கிறார்.அங்கிருந்து இந்தியா திரும்பும் மோடி சரியாக 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.பாஜக சார்பில் ரேணிகுண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அதன் பின் மாலை 5.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் திருப்பதிக்கு வருகிறார்.
ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.இரவு 7.20 மணியளவில்  திருமலையிலிருந்து புறப்பட்டு  ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு  இரவு 8.15 மணிக்கு வரும்  மோடி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.இதற்காக திருமலையில்  மூவாயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

author avatar
kavitha