முதல்வர் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்த மோடி & தமிழிசை சவுந்தரராஜன் !

முதல்வர் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்த மோடி & தமிழிசை சவுந்தரராஜன் !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று ட்விட் செய்துள்ளார். இதற்கு பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ” தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார். 

author avatar
Vidhusan
Join our channel google news Youtube