மோடியிடம் சிஏஏ குறித்து பேசவில்லை.! மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் – ட்ரம்ப்.!

  • பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஐதராபாத் இல்லத்துக்கு சென்று ட்ரம்ப் மற்றும் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 3 ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து ட்ரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினர்.

அதற்கு ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். பின்னர் மத சுதந்திரத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார் என்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடக்கும் வன்முறை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அதைக்குறித்து பிரதமரிடம் நான் கேட்கவில்லை எனவும் டெல்லியில் ஏற்பட்ட பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என குறிப்பிட்டார். இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு குடியரசு மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முடித்தவுடன் திரும்ப அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்