மோடி-ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 50 குரங்குகள், 35 நாய்கள் அகற்றப்பட்டன...!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய

By vidhuson | Published: Oct 12, 2019 04:15 PM

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் இருந்த 50 குரங்குகள் மற்றும் 35 நாய்கள் அகற்றியுள்ளனர். 50 குரங்குகைளையும் சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கும் 35 நாய்களையும் நாய்கள் காப்பகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc