குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை – பிரதமர் மோடி திட்டவட்டம்

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்வட்டமாக தெரிவித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 1000 கோடி மதிப்பில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றார். மேலும் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்.இந்த சிலையானது 63 அடி உயரம் கொண்டது. சிலையையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, வாரணாசி உள்ளிட்ட புனித தலங்கள், புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.மேலும் அயோத்தியில் மத்திய அரசின் கைவசமுள்ள 67 ஏக்கர் நிலத்தை புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் எதிர் நோக்கி வந்தாலும், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்கும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று  திட்வட்டமாக கூறினார்.

author avatar
kavitha