பிரதமர் மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை அதிபர் பேட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர

By manikandan | Published: May 31, 2019 06:48 PM

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவி ஏற்பு விழாவில் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்துகொண்டார். பின்னர் டில்லியில் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை அடுத்து பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, 'இலங்கைக்கு நரேந்திர மோடி வருகை புரிய உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம். உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஜனநாயக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.' எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வருகிற ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மாலத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனை அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா பேசியுள்ளார். DINASUVADU  
Step2: Place in ads Display sections

unicc