2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும்-அமித்ஷா

2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை .2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும்.

2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும், காகித மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான மாற்றமாக இது இருக்கும்.

பாஸ்போர்ட், வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.