புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதனையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார்.

ஆனால் துணை சபாநாயகருக்கான பதவி காலியாக இருந்தது.இந்த பதவிக்கு போட்டியிடுவதற்காக சுற்றுலா வளர்ச்சி  கழக தலைவராக இருந்த சட்ட மன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் தேர்வு செய்யப்பட்டார் .இதனால் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று துணை சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் எம்.என்.ஆர்.பாலன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.தற்போது அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எதிர்க்கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.