கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராஜினாமா செய்த  எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.மேலும் 5  எம்.எல்.ஏ.க்களும் மனுதாக்கல் செய்தனர்.

இந்த  வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டும்  என்றும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமைக்கு(இன்று ) விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.இதனையடுத்து இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.