பிரதமர் மோடிக்கு புதிய கல்வி கொள்கை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு புதிய கல்வி கொள்கை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய கல்விக் கொள்கை குறித்த கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அண்மையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்தது. இது 21ம் நூற்றாண்டின் அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.  பலரும் இந்த புதிய கல்விக் கொள்கைகளை ஆதரித்தனர். அதே சமயம் பல கட்சியினர் மற்றும் பிரபலமானவர்கள் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மாநிலங்களில் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது எனவும், தொழில் பயிற்சி அறிமுகம் சாதியப் படிநிலைகள் வலுப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube