எடப்பாடி தூக்கில் தொங்க வேண்டும் - வலு ஓட்ட நறுக்கப்படும் - கே.சி பழனிச்சாமி நீக்கம் மோடியின் விசுவாசம் - ஆவேச தமிழ்பிரசன்னா

  கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்

By Fahad | Published: Apr 09 2020 04:10 AM

  கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் தமிழ்பிரசன்னா பேசுகையில்; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இனி எதிர்கட்சி தலைவராக கூட முடியாது என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசியுள்ளார். உண்மை தான் அவர் இனி நிரந்தர முதல்வர்;, இனி அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசும் போது வார்த்தைகளை பார்த்து பேசு வேண்டும், ஜெயலலிதா இருக்கும் போது கைநீட்டி பேசியவதற்கு அஞ்சியவர்கள், ஆளில்லாத வானில் வாலை ஆட்டினால் வால் ஒட்டாக நறுக்கப்படும், தமிழக முதல்வர் போன்று நான் அடிமையில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது தமிழகத்திற்கு அவமானம், கொஞ்சம் சூடு சுரணை இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி தொங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஆதரிப்போம் என்று கூறிய கே.சி.பழனிச்சாமி நீக்கப்பட்டது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி மீது கொண்டுள்ள விசுவாசத்தினை காட்டுகிறது என்றார்