தமிழிசைக்கு வாழ்த்து செய்தி வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது

பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk