ஏவுகணை நாயகன் மறைந்த நாள் இன்று!

ஏவுகணை நாயகன் மறைந்த நாள் இன்று!

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள், தமிழ்நாட்டில் உள்ள, இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா அவர்களுக்கு 5-வது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி பருவத்தில், பிரகாசமான மாணவனாக திகழ்ந்தார்.  தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றுள்ளார்.

ஏவுகணை நாயகன்

இவர் 1960-ம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின் இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். அதன்பின் இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.  மேலும் பல ஆராய்ச்சி நிறுவனங்களில் பனி புரிந்துள்ளார். ஒரு தனிமனிதனாக இருந்து தனது வாழ்வில் பல சாதனைகளை படைத்து, எளிமையின் உருவாய் வாழ்ந்தார் என்பதற்கு அடையாளம் இவர் மட்டுமே.

ஏவுகணைகளை ஏவிய சாதனை மன்னன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் மட்டுமல்லாது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இவருக்கு பல பட்டங்களையும், விருதுகளையும் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவர்

இவர், கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு, லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியாவின் பதினொன்றாவது குடியரசு தலைவராக, ஜூலை 25, 2002-ல் பொறுப்பேற்றார். அதன்பின் ஜூலை 25, 2007-ம் ஆண்டு வரை குடியரசு  தலைவராக பணியாற்றினார்.

மாணவர்களின் ஆசான்

கனவு காணுங்கள் 

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல 

உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ 

அதுவே கனவு 

அப்துல்கலாம் மாணவர்களின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வந்தார். கனவு காணுங்கள் என, உறங்கிக் கொண்டு இருந்த மாணவர்களின் லட்சிய கனவை தட்டி எழுப்பி விட்டவர். தன்னை போல் மற்றவர்களும் வளர வேண்டும் என்று எண்ணிய ஒரு மிகப்பெரிய தலைவர் அப்துல்கலாம்.

இறுதி மூச்சும் மாணவர்களுக்காக

உலகம் உன்னை அறிமுகம் 

செய்வதை விட..!

உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

என்ற அவரது பொன்மொழிக்கேற்றவாறு நடந்தவர் அபதுல்கலாம். மாணவர்களின் நலனில் அக்கறை  கொண்டவராக இருந்த இவர், இறுதியாக மாணவர்களிடம் உரையாற்றும் போதே அவரது உயிரும் அவரை விட்டு பிரிந்துள்ளது. ஜூலை 27, 2015 இந்தியாவின் மோகலாயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில், மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube