சூப்பர் ஹோரர் ஃபிலிமுடன் மிஷ்கின்.! டைட்டில் என்ன தெரியுமா.!

சூப்பர் ஹோரர் ஃபிலிமுடன் மிஷ்கின்.! டைட்டில் என்ன தெரியுமா.!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது.

இந்த ஊரடங்கில் அவர் மூன்று கதைகளை ரெடி செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார். அதில் ஒன்று அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும், அதில் அருண் விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து சிம்பு மற்றும் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை 2021ல் தொடங்கிருப்பதாகவும் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஹோரர் படத்தை அருண் விஜய்யின் படத்தை அடுத்து எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ல் வெளியான "பிசாசு" என்ற படத்திற்கு பின் இவர் இயக்கும் இரண்டாவது படமாகும். மேலும் இந்த படத்தின் டைட்டிலை " காவு" என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காவு என்றால் கடவுளுக்கு பலி கொடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Latest Posts

உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!
வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!