BREAKING:அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்- உயர்நீதிமன்றம்.!

BREAKING:அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்- உயர்நீதிமன்றம்.!

  • உயர்நீதிமன்றம் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. 
  • ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் எனவும் கூறிஉள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு,க.சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சரோஜா போட்டியிட்டார். திமுக சார்பில் திமுகவின் துணைப் பொதுச்செலயலாளராக உள்ள வி.பி.துரைசாமி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் அமைச்சர் சரோஜா 86,901 வாக்குகளும் , வி.பி.துரைசாமி  77,270 வாக்குகளும் பெற்றனர்.இதனால் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து தோல்வியடைந்த வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடர்ந்து இருந்தார்.

அதில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்து தான் அமைச்சர் சரோஜா வெற்றிபெற்று உள்ளார்.எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் , மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. பின்னர் அமைச்சர் சரோஜா தனக்கெதிரான மனுவை நிராகரிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் அமைச்சர் சரோஜாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.பின்னர் இந்த வழக்கு இருதரப்பின் வாதங்களும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கேட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில் இன்று நீதிபதி பாரதிதாசன் வழங்கிய தீர்ப்பில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் என்றும் ,மனுதாரர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கில் முழுமையான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால் வி.பி.துரைசாமி தொடர்ந்த மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தார்.

 

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube