முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர

By venu | Published: Aug 17, 2019 05:05 PM

முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இம்மாதம் 28-ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முதலமைச்சருடன்  சில அமைச்சர்களும், அதிகாரிகளும்  செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகரில்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன. நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc