இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி? என்ன சொல்கிறார் அவர்..

இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை என்று என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அதிமுக சார்பாக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்..அந்த வகையில்   பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவரிடம்  கேசவநேரி  பகுதியைச் சேர்ந்த   ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட சிலர், ரேஷன் கடை கேட்டு மனு அளிக்க சென்றனர். அப்போது  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு அளிக்க சென்றவர்களையும்,இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை . இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் பேசியதாக திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.