உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில்  சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது .

பால் உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது.சட்டப்பேரவையில் அறிவித்தப்படிதான் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது.மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

Join our channel google news Youtube