சீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.!

இந்திய- சீன எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நம்நாட்டு ராணுவத்தை சேர்ந்த நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான, லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலுக்கு பிறகு, லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி, லடாக் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, கலந்துரையாடிவிட்டு வந்தார். இதனால், இருநாட்டு எல்லை பிரச்சனை மீண்டும் பதற்றநிலையை அடைந்தது.

 இந்நிலையில், இந்திய- சீன எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நம்நாட்டு ராணுவத்தை சேர்ந்த நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுகோய் 30MKI மற்றும் மிக்-29 ரக இந்திய போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்த விமானங்கள் சீன எல்லையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

author avatar
murugan