இந்த விஷயத்திற்காக பேஸ்புக் உடன் இணைந்த மைக்ரோசாப்ட்.!

பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம்

By manikandan | Published: Jun 25, 2020 08:11 AM

பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம் வெகு குறைந்த வரவேற்பை பெற்றுள்ளதால் மைக்ரோசாப்ட்டின் மிக்ஸர் சேவை ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறதாம்.

உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனமானது மிக்ஸர் எனும் சேவையை செயல்படுத்தி வந்தது. இது பேஸ்புக் கேமிங் தளம் போல ஒரு கேம் ஸ்ட்ரீமிங் தளம்  ஆகும்.

இந்த மிக்ஸர் சேவையை வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தி கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். காரணம், இந்த மிக்ஸர் சேவையானது அதன் சக போட்டியாளராக பார்க்கப்படும் பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம் வெகு குறைந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே மிக்ஸர் சேவை நிறுத்த படுவதாக மைக்ரோசாப்ட் கேமிங் தலைவர் அறிவித்துள்ளார். அதே போல மிக்ஸர் பயனர்கள் அப்படியே பேஸ்புக் கேமிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளனராம். மிக்ஸர் பயனர்கள் தங்கள் தரவுகளை கொண்டு அப்படியே பேஸ்புக் கேமிங்கில் செயல்படுத்த முடியுமாம். இந்த நடைமுறை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு பின்னர் தானாகவே மிக்ஸர் பயனர்கள் பேஸ்புக் கேமிங் பயனர்களாக மாற்றப்பட்டுவிடுவார்களாம்.

Step2: Place in ads Display sections

unicc