எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்… எடப்பாடியை சரமாரியாக சாடிய ஸ்டாலின்….

  • எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மோடி-அமித்ஷாவை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் அரூரில் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய ஸ்டாலின், எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மோடி-அமித்ஷாவை வணங்கிக் கொண்டிருப்பதாக அப்போது அவர் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாஜக, பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை சரமாரியாக சாடிய ஸ்டாலின், ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் என பட்டம் கொடுத்தவர் அன்புமணி என்று கூறிய அவர், டயர்நக்கிகளுடன் இப்போது அன்புமணி ஓட்டு கேட்டு வருவதாகவும் விமர்சித்தார். பாமக கட்சி கூட்டணி என்கிற பெயரில் கொள்கையை அடகு வைத்த கட்சி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment