FIFA WORLD CUP 2018:நடப்பு சாம்பியனை ஓட விட்ட மேக்ஸிகோ அணி!மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி!

இன்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற உள்ளது.

இரவு 8.30 மணிக்கு எப் பிரிவில் வலிமை வாய்ந்த அணியும் நடப்பு சாம்பியனுமான ஜெர்மனி அணி மெக்சிகோ அணியை மோதியது. நடப்பு கால்பந்து தொடரில் கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாக கருதப்படும் ஜெர்மனி அணி மெக்சிகோவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக  கோஸ்டாரிக்கா அணி மற்றும் செர்பிய அணிகள் மோதிய போட்டியில்  செர்பியா அணி 1-0 வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment