கொரோனா தொற்றை தடுக்க மெக்ஸிகோ அரசின் புதிய ஐடியா!

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் ஆத்திகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை உலகம் முழுக்க இந்த வைரஸால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மெக்ஸிகோவில் இதுவரை 717 பேர் கொரோனா வைராசல் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருக்கும் 195 ரயில் நிலையங்களில் நாளொன்றுக்கு 50 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். 

அதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மெக்சிகோ அரசு புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மனிதர்களின் உடலில் உள்ள வெப்பத்தை கண்காணிக்கும் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலில் அதிக வெப்பம் கொண்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களை கொரோனா வைரஸ் தொற்று உடற்பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர்.  இதன் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க மெக்சிகோ அரசு முயற்சி செய்து வருகிறது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.