43வது முறையாக தனது முழுகொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து

By Fahad | Published: Apr 05 2020 01:07 AM

கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு  நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 76 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இதன்காரணமாக 35,500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க எச்சரியாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.