மழைக்காலங்களில் நம்மை தாக்கும் மலேரியா காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்….!!!

மழைக்காலம் என்றாலே பல நோய்கள் நம்மை மாறி, மாறி தாக்கும். ஆனால் அவைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் உண்டு. இந்த காய்ச்சர் வருவதற்கு முக்கிய காரணமே நமது தூய்மையற்ற நடவடிக்கைகள் தான்.

மலேரியா :

மலேரியா காய்ச்சல் பெண் அனாசபிலிஸ் என்ற கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில இனப்பெருக்கமாகக் கூடியது. இந்த வகையான கொசுக்கள் நம்மை இரவு நேரத்தில் கடிக்க கூடியது. கொசுக்களின் உமில்நீர்வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும்.

Image result for மலேரியா :

பின்பு அவை இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து இரத்தத்துக்கு வந்து சிவப்பணுக்களை அளிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

தடுக்கும் முறைகள் :

பூச்சி கொல்லி :

Image result for பூச்சி கொல்லி :

மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் தாக்காத வண்ணம் பூச்சி கொல்லி மருந்துகளை நமது படுக்கை அறை மற்றும் வீட்டிற்குள் தெளிக்க வேண்டும். பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கும் போது இந்த வகையான கொசுக்கள் நம்மை தாக்காதவாறு காத்து கொள்ளலாம்.

கதவுகளை அடைத்தல் :

Related image

இரவு நேரங்கள் மட்டுமல்லாது பகல் நேரங்களில் கூட, நமது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து வைத்துக் கொள்வது மிக சிறந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் நோய்களை பரப்பும் கொசுக்களின் தாக்குதலில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.

வலை :

Image result for கொசுவலை

 

இரவு நேரங்களில் தூங்கும் போது அதிகமானோர் கொசுவலைகளை பயன்படுத்துவதுண்டு. அதைவிட பூச்சிகளை கொல்ல கூடிய தன்மை கொண்ட வலைகளை நாம் பயன்படுத்துவது மிகச் சிறந்தது.

நீர்நிலை தூய்மை :

Related image

நமது வீடுகளில் அல்லது நம்மை சுற்றியுள்ள பகுதிகளில, நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் காத்துக் கொள்ளலாம்.

கழிவு நீர் :

Image result for கழிவு நீர் :

நமது வீட்டிலோ அல்லது நம்மை சுற்றி உள்ள பகுதிகளிலோ, கழிவுநீர் தேங்காமல் காத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நீர் தேங்காதவண்ணம் நம் சுற்றுப்புறத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment