நமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று!

நமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று!

காதுகேளாத பெண்ணை கரம்பிடித்த பெல்

இவர் தனது எட்டு வயதிலேயே நன்றாக பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத கிரகாம், பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இவர் பேச்சை மின்ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தபோது, ஒரு காதுகேளாத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உந்துசக்தி

இன்று நமது கைகளில் தொலைபேசி இருப்பதற்கு காரணமாக  திகழும் சாதனை மனிதன் கிரகாம். இவரது தாயாரும், மனைவியும் செவிடர்கள். இவர்களின் இந்த நிலை தான், பெல் தொலைபேசியை கண்டுபிடிப்பதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று கூட கூறலாம். இவரது ஆற்றல் மிக்க திறமையால், 1876-ம் ஆண்டு, அவர் கண்டுப்பிடித்த உலகின் முதல் தொலைபேசி மூலம், அவரது உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். பெல் முதலில் தொலைபேசியில் பேசிய முதல் சொற்றோடர் என்னவென்றால், ' வாட்சன் இங்கே வாருங்கள், உங்களை காண வேண்டும்"இவர் பேசிய இந்த சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது.

தொலைபேசியின் பெருமை

இவர் கண்டுபிடித்த தொலைபேசி பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. இதனையடுத்து, பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், இவர் கண்டுபிடித்த தொலைபேசி பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பார்த்த பிரேசில் நாட்டு மன்னர் இதனை வியப்போடு எடுத்து பயன்படுத்தினார். அதன்பின் தான் இந்த தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. மறைவு  இவ்வாறு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த சாதனை நாயகன் கிரஹாம் பெல், அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி காலமானார். இவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசியிலும் 5 நிமிடம் அணைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.  ]]>

Latest Posts

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் - அமைச்சர்  உதயகுமார்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..!
தல தோனிக்கு மரணமாஸ் பாடல் பொருத்தமானது... ராக்ஸ்டார் அனிருத்..!
இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இன்று அதிகாலை 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது..!
நீட் பலிபீடம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு - மு.க. ஸ்டாலின்.!
கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் 1000 ரூபாய் அபராதம் - கலெக்டர் அருண்!
அமெரிக்காவில் நாளையுடன் டிக்டாக், வீ-சாட் செயலிகளுக்கு தடை..!
இன்று தொடங்குகிறது ஐபிஎல்...CSK vs MI வெற்றி யாருக்கு..?
3 அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் -கே.எஸ்.அழகிரி