டெல்லியில் முப்படை வீரர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு.....!!

டெல்லியில் முப்படை வீரர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு.....!!

  • அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது .
  • முப்படை அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் .
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது. இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்ககோரி இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.மேலும் இந்தியா பல்வேறு நாடுகளின் முயற்சியை மேற்கொண்டு வரும் சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அபிநந்தனை விடுவிக்ககோரி அமெரிக்கா , ஜப்பான் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று இந்திய முப்படை அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.