MCC புதிய உறுப்பினராக ஷேன் வார்னே தேர்வு….!!

MCC புதிய உறுப்பினராக ஷேன் வார்னே தேர்வு….!!

கிரிக்கெட் உலகம் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், போட்டிக்கான புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் அதிகாரம் எம்சிசி (MCC- Marylebone Cricket Club) என்ற அமைப்பிடம் உள்ளது.
எம்சிசியின் ஆணைக்கு மாற்று வழியோ, குறுக்கு வழியோ கிடையாது. எம்சிசி
பரிந்துரைக்கும் விதிமுறைகள் எதுவாக இருந்தாலும் ஐசிசி கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும்.இந்நிலையில், மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பில் ஆறு வருட காலம் உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றிய ராட் மார்ஷ் (ஆஸ்திரேலியா) பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஆர்எஸ் விதிமுறைகள்,பேட்டின் அளவுகள், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்துகள் போன்றவை எம்சிசியின் அண்மைக் காலப் பரிந்துரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *