உலகநாயகனுக்காக ஒரே மேடையில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்?!

உலகநாயகனுக்காக ஒரே மேடையில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்?!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது. நாளை கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் கமல் தனது தந்தை ஸ்ரீனிவாசனுக்கு சிலை திறக்க உள்ளார். இந்த விழா நாளை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து நவம்பர் 8ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் ஹே – ராம் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
பின்னர் நவம்பர் 17ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில்  இளையராஜா பிரமாண்ட இசை கச்சேரி ண்ட நடத்த உள்ளார். இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவிற்காக அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
அஜித்குமார் அண்மை வருடங்களாக எந்தவித திரை துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வில்லை. இந்த விழா இசைஞானி இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி, உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொள்வதால் அஜித்தும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube