காயம் காரணமாக போட்டியில் இருந்து தவான் விலகல் ! புதிய வீரர் இந்திய அணியில் சேர்ப்பு

ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக  தவான் விலகியுள்ளார்.   இந்திய

By venu | Published: Dec 11, 2019 02:15 PM

  • ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக  தவான் விலகியுள்ளார்.  
  • இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை உறுதி செய்யும் மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி முடிவடைந்ததும் வருகின்ற 15 ஆம் தேதி ஒரு நாள் தொடர் தொடங்க உள்ளது.இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் விலகி உள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு சார்பாக முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் அவர் போட்டியில் விளையாடுவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc