மனைவி இறந்த மருத்துவமனை கழிவறையில் தாய் உடல் மீட்பு.!

மனைவி இறந்த மருத்துவமனை கழிவறையில் தாய் உடல் மீட்பு.!

மகாராஷ்டிராவை சார்ந்த ஒரு நபரின் மனைவி இறந்த மருத்துவமனையின் கழிவறையில், அவரின் தாய் உடல் மீட்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை சார்ந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை பூசாவலில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு சிகிக்சை பெற்று  வீடு திரும்பினார். பின்னர், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜல்கான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அந்த மருத்துவமனை  ஐ.சி.யூ வார்டில் படுக்கை இல்லாதால் ஆறு மணி நேரம் காத்திருந்ததால் அந்த நபரின் மனைவி ஜூன் 2-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மனைவி உயிரிழந்த அதே மருத்துவமனையில் உள்ள ஒரு கழிப்பறையில் இருந்து அந்த நபரின் தாய் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

82 வயதான அந்த நபரின் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பூசாவல் ரயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜல்கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அந்த நபர் தன் தாயை பற்றி மருத்துவமனையில் விசாரிக்க தன் உறவினர்களை அழைத்து சென்று மருத்துவமனையில் விசாரித்தார். ஆனால், அவரின் தாய் பெயரில் யாரும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் தான் மருத்துவமனை வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் கழிவறையில் இருந்து துர்நாற்றம் வருவதாக புகார் கொடுத்தனர். இந்த புகார் அடைப்படையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை கதவைத் உடைத்து திறந்தபோது உடல்  சிதைந்த நிலையில் அந்த நபரின் தாய் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக உடல் கண்டுபிடிக்கப்பட்ட கழிவறையை அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் , அங்குள்ள நோயாளிகளும்  திறக்கவோ இல்லை என கூறப்படுகிறது. ஆனால், உடல் மீட்கப்பட்ட கழிவறையில் உட்பக்கம் தாழ் போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் பி எஸ் கைர் உட்பட மருத்துவமனையின் 5 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்விச் செயலாளர் சஞ்சய் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube