கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார்! ஐபிஎல் வீரர் உட்பட மேலும் ஒருவர் கைது

சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு

By venu | Published: Nov 07, 2019 11:16 AM

சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக்  போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி,மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.காசி கர்நாடகா அணியிலும் ,தற்போது மிசோரம் அணியிலும் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக  பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் நிஷாந்த் சிங்,விஸ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc