திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும்! படக்குழுவினர் அறிவிப்பு!

திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும்! படக்குழுவினர் அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், கடந்த 15-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 

இப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதற்கிடையில், கொரோனா அச்சத்தால் மார்ச் 20 மற்றும் 27 அஆகிய நாட்களில் வெளியாகவிருந்த படங்களின் தேதி  தள்ளி போடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து விழாக்கமளித்த மாஸ்டர் படக்குழுவினர், ‘மாஸ்டர் வெளியீடு க்கண்டிப்பாக 9-ம் தேதி இருக்கும். அதற்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம். மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழலில், ‘மாஸ்டர்’ படம் அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக இருக்கும் என நம்புகிறோம்.’ என கூறியுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube