தல-61 படத்தை மாஸ்டர் இயக்குனர் இயக்குகிறாரா.?

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக

By ragi | Published: Jun 30, 2020 03:40 PM

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் குமார் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  கபூர் தயாரிக்கும்,இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை குரேஷி நடிக்கிறார, மேலும் கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது  அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது, ஆம் சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக தல அஜித் தனது அடுத்த படத்தின் கதையை போன் கால் மூலம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிட தயாராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அஜித்திடம் ஒரு வெயிட்டான கதையை கூறி ஒகே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வலிமை படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc