மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்… அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை…

மாஸ் காட்ட காத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம்… அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை…

இந்தியாவில் நல்ல மதிப்பை பெற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகன் ஆர் பி.எஸ். 6 எஸ் சி.என்.ஜி. என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ததுள்ளது. இதன் இந்திய  விலை ரூ. 5.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேகன் ஆர் சி.என்.ஜி. மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சி.என்.ஜி. மோடில் 58 பி.ஹெச்.பி. பவர், 78 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் மோடில் 81 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார், LXI எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கும் வேகன் ஆர் கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மூன்றாவது பி.எஸ். 6 மாடல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் இதற்க்கு முன்னதாக ஆல்டோ 800 மற்றும் எர்டிகா எம்.பி.வி. மாடல்களை பி.எஸ்.6 தரத்தில் வெளியிட்டிருந்தது.  இந்த புதிய மாடலை மிஷன் கிரீன் மில்லியன் எனும் திட்டத்தின் கீழ் மாருதி சுசுகி கார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி நிறுவனம் மிஷன் கிரீன் வாகனங்களின் கீழ் மைல்டு ஹைப்ரிட், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் மற்றும் சி.என்.ஜி. கார்கள் என அடுத்த சில ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்ய முடிவு எடுத்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube