கடந்த உலகக்கோப்பையை விட நடப்பில் பார்ம் அவுட்டில் இருக்கும் மார்ட்டின் குப்டில்!

கடந்த உலகக்கோப்பையை விட நடப்பில் பார்ம் அவுட்டில் இருக்கும் மார்ட்டின் குப்டில்!

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கியதிலே இருந்து தடுமாறி இருவருமே விளையாடினர்.

இப்போட்டியில் மார்ட்டின் குப்டில் 14 பந்தை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் நடப்பு உலககோப்பையில் மார்ட்டின் குப்டில் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த உலகக்கோப்பையில் மார்ட்டின் குப்டில் விளையாடிய 9 போட்டிகளில் சேர்ந்து 167 ரன்கள் மட்டுமே அடித்து உள்ளார். அதில் முதல் போட்டியில் இலங்கை அணியுடன் விளையாடும் போது மட்டும் 73* ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக்கோப்பையில் மார்ட்டின் குப்டில் 547 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இருந்தார்.ஆனால் இந்த வருட உலகக்கோப்பையில் அதற்கு எதிராக விளையாடி வருவதால் மார்ட்டின் குப்டில் மேல் ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்.

இந்த வருட உலகக்கோப்பையில் மார்ட்டின் குப்டில் அடித்த ரன்கள்  73*, 25, 0, 35, 0, 5, 20, 8, 1 .

author avatar
murugan
Join our channel google news Youtube