பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றாதது கவலையளிக்கிறது.. பிரதமர் உரை!

இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள்

By surya | Published: Jun 30, 2020 04:41 PM

இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை எனவும், மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கொரோனா விதிமீறலுக்காக, ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிர ருபாய் அபராதம் விதிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம் எனவும், பிரதமர் முதல சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான் என கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc