ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல் : மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு

By Fahad | Published: Apr 01 2020 05:23 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளார். இதனையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.வேட்புமனு தாக்களில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர்  சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

More News From rajyasabha election