குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை.. மஞ்சுவிரட்டில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்..

  • மஞ்சுவிரட்டில்  குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை.
  • வியக்கவைக்கும் உண்மை சம்பவம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அருகே உள்ள  சிராவயல் என்ற  ஊரில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு அந்த ஊரின் சார்பாக  மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை காண அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக தங்களது குழந்தைகளுடன்  வருவது வழக்கம். இங்கு  மஞ்சுவிரட்டு என்பது ஜல்லிகட்டை போல் வாடி அமைத்து காளைகள் அவிழ்த்துவிடப்படாது. இங்கு வயல் வெளி அல்லது வெட்ட வெளியில்  காளைகள்  அவிழ்த்து விடப்படும். இதில் காளைகள் ஒரு சீராக இல்லாமல் தொடர்ச்சியாக காளைகள் அவிழ்த்து விடப்படும். எந்த காளை எந்த பகுதியிலிருந்து தாக்கும் என்று கணிக்கவே முடியாது. அந்த அளவிற்கு எல்லா பக்கமும் காளைகளின் ஓட்டம் இருக்கும்.

Image result for சிறுவயல் மஞ்சுவிரட்டு

இவ்வாறு அவிழ்த்து விடும் முன்பாக, இந்த காளைகள்  வாகனங்களில் அழைத்து வருவோர் அவற்றை அப்படியே வயல்வெளி, கண்மாய் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம். இதில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில், இவ்வாறு வாகனத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று திடீரென்று சீறிப்பாய்ந்து மிரண்டு ஓடியது. இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அலறி அடித்தபடி ஓடினர்.

https://twitter.com/THM_Offi/status/1218428794387566597

அப்போது தன் இரண்டு குழந்தைகளுடன் எதிரில் வந்த பெண்,சட்டென்று  குனிந்து தரையில் அமர்ந்தார். அந்த காளையையும், அமர்ந்த தாயையும் குழந்தைகளையும் முட்டாமல், அப்படியே தாவிச் சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த காளையின் தன்மையை எண்ணி இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

author avatar
Kaliraj