உங்கள் முகத்தை பளபளவென மாற்றும் மாம்பழ பேஸ் பேக்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முகத்தின் அழகை மெருகூட்ட பல வகையான வழிமுறைகளை

By Fahad | Published: Apr 01 2020 01:08 AM

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முகத்தின் அழகை மெருகூட்ட பல வகையான வழிமுறைகளை மேற்கொள்கிறோம். ஆனால், இவை அனைத்துமே நாம் எதிர்பாக்கின்ற தீர்வை அளிப்பதில்லை. நம்மில் அதிகமானோர், இயற்கையான முறைகளை மேற்கொள்வதை விட, செயற்கையான முறைகளை தான் அதிகமாக மேற்கொள்கிறோம். இவை நமது முகத்தில் பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், நமது முகத்தை பளபளவென மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பாப்போம்.

மாம்பழ மற்றும் முல்தானி மெட்டி

தேவையானவை
  • மாம்பழச்சாறு - 2 ஸ்பூன்
  • தயிர் - 1 ஸ்பூன்
  • முல்தானி மெட்டி - 3 ஸ்பூன்
செய்முறை ஒரு பாத்திரத்தில் மாம்பழச்சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள் தயிர் மற்றும் முல்தானி மெட்டியை கலந்து, முகத்தில் பூச வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளபளவென இருக்கும்.

மாம்பழம் மற்றும் பன்னீர்

தேவையானவை 
  • மாம்பழ சாறு -2 ஸ்பூன்
  • தயிர் - 2 ஸ்பூன்
  • பன்னீர் - 2 ஸ்பூன்
  • முல்தானி மெட்டி - 2 ஸ்பூன்
செய்முறை ஒரு பாத்திரத்தில், மாம்பழ சாறு, பன்னீர் மற்றும் முல்தானி மெட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை தயிர் பதத்தில் வந்தவுடன் தயிரை சேர்த்து கலக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளவென காணப்படும்.