“மங்கல்யான்” வெற்றிகரமாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்து சாதனை !

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ‘மங்கல்யான்’ விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 9 மாத பயணத்துக்கு பின்னர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன புகைப்படக் கருவி மூலம் செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அதுமட்டுமின்றி செவ்வாய் கிரகத்தில் அடிக்கடி உண்டாகும் புயல்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கான அரிய புகைப்படங்களை மங்கல்யான் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் வெறும் 6 மாதங்களுக்கு மட்டும் திட்டமிடப்பட்ட மங்கல்யான் விண்கலத்தின் சாதனை பயணம் இன்று வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

 

author avatar
Vidhusan