லஞ்சம் வாங்கிய 3 போலீஸ்காரர்களுக்கு கட்டாய ஓய்வு..!

மதுரையை சேர்ந்த காவளர்களான செந்தில்குமார், பாலமுருகன், இளங்கோவன். இவர்கள்

By surya | Published: Sep 20, 2019 07:18 PM

மதுரையை சேர்ந்த காவளர்களான செந்தில்குமார், பாலமுருகன், இளங்கோவன். இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு நகரில் நடந்த வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில், அவர்கள் மூவரும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன், செந்தில்குமார், பாலமுருகன், இளங்கோவன் ஆகிய 3 பேரையும் கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம், மதுரை காவல்துறையீனரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Step2: Place in ads Display sections
  • TAGS

unicc