500ரூ அபராதத்திற்கு வாகனத்தை தீ வைத்த நபர் !

மத்திய பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த

By Fahad | Published: Apr 06 2020 01:25 AM

மத்திய பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து காவலர் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். வாகன ஓட்டியின் மேல் போக்குவரத்து விதிமீறியதாக கூறி, அவரிடம் 500 ரூபாய் அபராதமாக கேட்டுள்ளனர். அபராதம் செலுத்த மறுத்த அந்த நபர் பல மணி நேரமாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எறித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வண்டி தீயின் தாக்கத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்களிடம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கேட்கும்போது, அவர்கள் போக்குவரத்து காவலர்கள் தஙக்ளது பெயர் மற்றும் மற்ற தகவல்களை மறைத்துக்கொண்டு பணம் பறிக்கும் நோக்குடன் செயல்பட்டதாக கூறினார்கள்.