இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்..!

மலேசியாவில்  உள்ள பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின்

By surya | Published: Dec 08, 2019 06:34 AM

மலேசியாவில்  உள்ள பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்போதைய பொதுச் செயலாளர், லிம் குவான் எங் ஆவார். இவர், பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர், அரசியலுக்கு வரும்முன் , அங்குள்ள ஒரு வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1986 ஆம் ஆண்டு கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், அவர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  12 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த அவர், 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் கோட்டா மலாக்காவில் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆனார். லிம், 1989 ஆம் ஆண்டு ஜனநாயக செயல் கட்சி இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில், அவர் கட்சித் துணை பொதுச் செயலாளர்ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2004 ல் கட்சி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் அணு நடந்த மலேசிய பொதுத் தேர்தலில், பாக்காத்தான் ராக்யாட்ட்டின் ஜனநாயக செயல் கட்சி 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சி 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சி 1 இடமும் வென்றன. ஜனநாயக செயல் கட்சி பெரியஅளவில் வெற்றியை பெற்று, லிம் பினாங்கு மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தனது பொறுப்பை ஏற்ற லிம், துணை முதல்வராக பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமியை நியமித்தார். மலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் துணை முதல்வர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், இவ்வளவு சாதனைகளை செய்த லிம், தனது 58ஆ பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு நாட்டு மக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc