இனி பாமாயில் இந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்போவதில்லை! காரணம் இதுதானா?!

மலேசியாவில் இருந்து சென்றாண்டு மட்டும் 163 கோடிகளுக்கு பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு மலேசியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. மலேசியாவில் இருந்து, அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடு இந்தியாதான்.
அப்படி இருக்க, மலேசியா நாடானது, ஐநாவில் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து,  காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீரை ஆக்கிரமித்துவிட்டது. என பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, இந்திய அரசனது, மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து, முற்றுலும் நிறுத்த வழிவகை செய்ய உள்ளது. மலேசியாவிற்கு பதிலாக இந்தோனீசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய  இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்க்கு எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்ததால், விரைவில் மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.