இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சே பிரதமரா..?

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சே பிரதமரா..?

மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் பெற்று இருந்து வருகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய  உள்ளநிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்பாகவே நடத்த உள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே  கூறினார். அதன்படி கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக 2 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்டு 5-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியது.இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உட்பட  4 முக்கிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் பெற்று இருந்து வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube