மும்பையில் மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு…!

மும்பையில் மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு…!

மும்பையில் கிழக்கு விரைவுச் சாலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது காலை 10 மணி அளவில் சுன்னாபட்டி இடையே பி.கே.சிவி செல்ல கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் ஒரு மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றுகொண்டிருந்தது.

பாம்பு செல்வதை பார்த்த அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைத்து தனது வாகனங்களை நிறுத்தினர். மேலும் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும் அந்த மலை பாம்பை பார்த்து கொண்டிருந்தபோது மலைப்பாம்பு ஒரு காரின் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பாம்பு பிடிப்பவர்களுடன் சென்று கிட்டத்தட்ட1 நேரம் போராடி காருக்குள் ஒளிந்திருந்த அந்த மலைப்பாம்பை பிடித்தனர். மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube