மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கை தொடங்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது மத்திய வங்கியில் கணக்கை துவங்கும் நடவடிக்கைகளை குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி விவசாய கடனை பெறுவதற்காக மத்திய வங்கியில் கணக்கை துவங்கவதற்கான விண்ணப்பத்தை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலே பெறலாம் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
murugan